கோவை ஓட்டுநர் நலசங்கம் சார்பில் விபத்து காப்பீடு, கண் சிகிச்சை முகாம்

கோவை மாவட்ட ஒன்றிணைந்த ஓட்டுநர் நலச்சங்கமான எஸ்.கே.டி டெலிகிராம் குரூப் சார்பாக விபத்து காப்பீடு மற்றும் கண் சிகிச்சை முகாம் கோவை இடையர்பாளையத்தில் நடைபெற்றது.


கோவை: கோவை ஓட்டுநர் நலச்சங்கம் சரா்பில் நடைபெற்ற சிறப்பு முகாமில் ஓட்டுநர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர்.

கோவை இடையார்பாளையத்திலுள்ள தனியார் மண்டபத்தில் எஸ்.கே.டி டெலிகிராம் குரூப்பின் கோவை மாவட்ட ஒன்றிணைந்த ஓட்டுநர் நலச்சங்கம் சார்பில் இந்தியா அஞ்சல் துறையின் விபத்து காப்பீடு மற்றும் ஐ பவுண்டேசனின் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இதற்கு கோவை மாவட்ட ஒன்றினைந்த ஓட்டுநர் நலச்சங்கத் தலைவர் எஸ்.கே.டி.ராஜாமணிக்கம் தலைமை வகித்தார். செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர் எம்.எஸ்.கே.சிவகுமார், பொருளாளர் காளிதாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



சிறப்பு விருந்தினராக கவுண்டம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ், துடியலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சிவகுருநாதன், ஐ பவுண்டேசன் அசிஸ்டண்ட் மேனேஜர் மன்சூர், பி.ஆர்.ஓ ஜெகநாதன், இந்தியன் போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சீனியர் மேனேஜர் பூபாலன் ஆகியோர் கலந்துக்கொண்டு விபத்து காப்பீடு மற்றும் கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தனர்.

இந்த முகாமில் கால்டாக்சி, டெம்போ, டிராவலர், ஆட்டோ ஓட்டுநர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.



அவர்களுக்கு மருத்துவ குழுவினர் இலவசமாக கண் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

மேலும் ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் இந்தியா அஞ்சல் துறையின் விபத்து காப்பீடு பெற்றுக்கொண்டனர். இதில் கோவை மாவட்ட ஒன்றிணைந்த ஓட்டுநர் நலச்சங்க உறுப்பினர்களுக்கு மட்டும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள காப்பீடு பிரீமியத்தை சங்கத்தினர் இலவசமாக செய்து கொடுத்தனர். மற்றவர்கள் 399 ரூபாய் பிரீமியம் மற்றும் உரிய ஆவணங்களை செலுத்தி காப்பீடு பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் துணை செயலாளர் கணேசன், துணை பொருளாளர் அண்ணாதுரை, இணை செயலாளர் ஈஸ்வரன், ஓருங்கிணைப்பாளர் சிராஜ்தீன், துணை ஓருங்கிணைப்பாளர் ஜனா என்கிற கனகராஜ், ஆசோகர் கார்த்திக் பாண்டி உட்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்துக்கொண்டனர். இறுதியில் சட்ட ஆலோசகர் ராஜாகோபால் நன்றி கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...