மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய திருப்பூர் மாவட்ட ஆட்சியர்

மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பேரணியை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூரில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பதாதகைளை ஏந்திச் சென்ற மாணவர்கள்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.



பிரமாண்ட திரையின் மூலம் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான குறும்படம் திரையிடப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இதில் கலந்து கொண்ட மாணவிகள் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பதாகைகளை கையில் ஏந்தியவாறு முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.



இதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் விநியோகம் செய்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...