கல்வி மட்டுமல்ல விளையாட்டிலும் மாணவர்கள் வெற்றி - பார்க் கல்வி குழுமத்திற்கு அமைச்சர் முத்துசாமி புகழாரம்

கல்வியில் மட்டுமல்ல விளையாட்டிலும் மாணவர்கள் வெற்றி பெற பார்க் கல்வி குழுமம் ஊக்குவிப்பதாக அக்கல்வி குழுமத்தின் விழாவில் அமைச்சர் முத்துசாமி புகழாரம் சூட்டினார்.


கோவை: ஆசிரியர்கள் தங்களது மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து, அவர்களை ஊக்குவித்து வாழ்வில் வெற்றி அடைய உதவவேண்டும் என்று பார்க் கல்வி குழுமம் விழாவில் அமைச்சர் முத்துசாமி அறிவுறுத்தினார்.

கோவை கணியூரில் அமைந்துள்ள பார்க் கல்வி குழுமத்தின் விழாவில் அமைச்சர் முத்துசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பார்க் கல்வி குழுமம் மற்றும் ரைசிங் சன் ஈவென்ட்ஸ் நடத்திய கோவை சாம்பியன்ஸ் T 20 கிரிக்கெட் போட்டியானது கடந்து அக்டோபர் 03 ஆம் தேதி துவங்கி அதன் இறுதி போட்டி 05 அக்டோபர் 2023 அன்று கணியூர் வளாகத்தில் நடை பெற்றது.

விளையாட்டு போட்டிகளில் 24 அணிகள் சிறப்பாக விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தின. இதன் இறுதி போட்டியில் ARS அகாடமி அணி கோப்பையை வென்றது. இந்த சாம்பியன்ஷிப் ஆட்டத்தின் பரிசளிப்பு விழா பார்க் கல்வி குழுமத்தின் தலைவர் Dr. ரவி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் Dr. அனுஷா ரவி வரவேற்புரையாற்றினார். அதனைத்தொடர்ந்து வெற்றிப்பெற்ற அணிகளுக்கு அமைச்சர் முத்துசாமி பரிசளித்தார். பின்னர் அவர் பேசியாதவது, மாணவர்கள் கல்வியில் மட்டுமல்ல விளையாட்டிலும் ஈடுபட்டு வெற்றிபெற வேண்டுமென்றுமென்று நமது முதலமைச்சர் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.

அதுபோல பார்க் கல்வி குழுமம் தனது மாணவர்களை விளையாடிலும் மேன்மையடைய செய்வது சிறப்பு என்று வாழ்த்தினார். மாணவர்களின் திறனை பெற்றோரைவிட ஆசிரியர்களே நன்கு அறிவார்கள். ஆகவே ஆசிரியர்கள் தங்களது மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து, அவர்களை ஊக்குவித்து வாழ்வில் வெற்றி அடைய உதவவேண்டும் என்று அறிவுறுத்தினார். தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுக்கு வந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...