கமல்ஹாசன் குறித்து உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் மீது புகார்

நாம் தமிழர் கட்சி மாநில பொறுப்பில் உள்ள சாட்டை துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கோவை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.


கோவை: சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாக்கும் வகையில் பேசிய சாட்டை துரைமுருகன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரிக்கை.



நடிகர் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலஹாசன் பற்றியும் உண்மைக்கு புறமான செய்தியை நாம் தமிழர் கட்சி மாநில பொறுப்பில் உள்ள சாட்டை துரைமுருகன் பதிவேற்றம் செய்துள்ளதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மக்கள் நீதி மய்யத்தினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

அதில் சாட்டை முருகன் கடந்த மாதம் 30ம் தேதியன்று கமலஹாசன் குறித்து பதிவேற்றம் செய்துள்ளார். அதில் கமலஹாசன் பெயர் காரணம் அவர் கன்னடர் கர்நாடகாவில் உள்ளது ஆசான் என்கின்ற ஊர் தான் பூர்வீகம் என்று பொய்யான தகவலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலும் கர்நாடகத்திலும் அரசியல் எதிர் கருத்துகள் பகிர்ந்து அமைதியற்ற சூழ்நிலையில் இருவரும் தன் பங்குக்கு மோதல்கள் ஏற்படுத்தும் விதமாக பேசுகின்றார் தன் சொந்த அரசியல் லாபத்திற்காக இந்தியா முழுவதும் பிரபலமான உலகநாயகன் கமலஹாசன் அவர்களை பற்றி உண்மைக்கு புறம்பான தவறான எந்தவித ஆதாரம் இல்லாத தவறான கருத்துக்களை முன்வைத்து அவருடைய புகழுக்கு கேடு விளைவிக்கும் வகையில் பொதுமக்களை குழப்பம் வகையிலும் நாம் தமிழர் கட்சி மாநில பொறுப்பாளர் சாட்டை துரைமுருகன் கருத்து தெரிவிப்பது கண்டனத்திற்குரியது.

ஆகவே சமூக வலைதளங்களில் வரும் பொய்யான அவதூறு தகவலை குறிப்பிட்ட யூட்யூப் சேனல் இருந்து அகற்றக் கோரியும் இரு தரப்புக்கும் மோதல் ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாக்கும் வகையில் பேசிய சாட்டை துரைமுருகன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...