பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச சிறப்பு முகாம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை மற்றும் மாவட்ட மாற்று திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.


திருப்பூர்: தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் முகாமில் ஏராளமானோர் பங்கேற்றனர்.



உதவி திட்ட அலுவலர் அண்ணாதுரை தலைமையில் தாராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற. இந்த முகாமில் மருத்துவ சான்றிதழ் வழங்குதல் தேசிய அடையாள அட்டை பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை பதிவு மற்றும் ஆலோசனை உதவி உபகரணங்களுக்கான பதிவு குழந்தைகள் நல மருத்துவர் ஆலோசனை எலும்பு மூட்டு மருத்துவர் ஆலோசனை மனநல மருத்துவ ஆலோசனை முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் அறுவை சிகிச்சைக்கான பதிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.



இந்த மருத்துவ முகாமில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த முகாமில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜெகதீசன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரி வட்டார வளமை மேற்பார்வையாளர் மல்லிகா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மருத்துவர்கள் செவிலியர்கள் சிறப்பு ஒருங்கிணைப்பாளர்கள் சிறப்பு பயிற்சியாளர்கள் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...