கோவை மாவட்ட மகளிர் கால்பந்து போட்டி- நிர்மலா கல்லூரி முதலிடம்

கோவை மாவட்ட கால்பந்து சங்க பெண்கள் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் மைக்கேல் காப் கல்லூரியை விழத்தி நிர்மலா கல்லூரி கோப்பையை வென்றது.


கோவை: கோவையில் மாவட்ட அளவில் நடைபெற்ற மகளிர் கால்பந்து போட்டியில் நிர்மலா கல்லூரி முதல் இடம் பிடித்தது.

கோவை மாவட்ட கால்பந்து சங்க, பெண்கள்‌ கால்பந்து சுழற்கோப்பை ஓபன்‌ கேட்டகரி 9.10.2023 மறறும்‌ 10.10.2023 ஆகிய இரண்டு நாட்கள்‌ குமரகுரு பன்முகக்‌ கலை அறிவியல்‌ கல்லூரியில்‌ நடைபெற்றது. இதனுடைய இறுதிப்போட்டி மற்றும்‌ பரிசளிக்கும்‌ விழா 10.10.2023 அன்று மாலை 4 மணியளவில்‌ குமரகுரு கால்பந்து விளையாட்டு மைதானத்தில்‌ நடைபெற்றது. நாக்‌ அவுட்‌ முறையில்‌ நடநத இப்போட்டியில்‌ 14 அணிகள்‌ பங்கேற்று விளையாடின.

தகுதிச்சுற்று ஆட்டங்களில்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட 4 அணிகளுக்கு இடையே போட்டிகள்‌ நடத்தப்பட்டு இறுதியாக 4 அணிகள்‌ முதல்‌ நான்கு இடங்களைப்‌ பெற்றது.

நிர்மலா மகளிர்‌ கல்லூரி 3-0 என்ற கோல்‌ கணக்கில்‌, மைக்கேல்‌ ஜாப்‌ கல்லூரியை வென்று முதல்‌ இடத்தை பிடித்தது. இரண்டாம்‌ இடத்தை COLDS GH ஜாப்‌ கல்லூரியும்‌ செயின்ட்‌ ஆன்ஸ்‌ மெட்ரிக்குலேஷன்‌ மேல்நிலைப்பள்ளி முறையே ஏ, பி அணிகளாக மூன்றாம்‌, நான்காம்‌ இடத்தை பிடித்து வெற்றி பெற்றது. முதல்‌ இடத்தை தட்டிச்சென்ற நிர்மலா மகளிர்‌ கல்லூரிக்கு ரொக்க பரிசு ரூ.5000 மறறும்‌ கேடயமும்‌ இரண்டாம்‌ இடத்தை பெற்ற மைக்கேல்‌ ஜாப்‌ கல்லூரிக்கு ரூபாய்‌ 3000 ரொககபரிசும்‌ , கேடயமும்‌ மூனறாம்‌ இடத்தை பிடித்த செயின்ட்‌ ஆன்ஸ்‌ மெட்ரிகுலேஷன்‌ மேல்நிலைப்பள்ளி ஏ அணிக்கு ரொக்கபரிசு ரூபாய்‌ 2000, கேடயம்‌ வழங்கப்பட்டது. நான்காம்‌ இடம்‌ பிடித்த செயின்ட்‌ ஆன்ஸ்‌ மெட்ரிகுலேஷன்‌ மேல்நிலைப்பள்ளி பி அணிக்கு கேடயம்‌, சான்றிதழ்‌ வழங்கப்பட்டது.

பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும்‌ சான்றிதழ்‌ வழங்கப்பட்டது.

கோவை மாவட்ட கால்பந்து சங்கத் தலைவர்‌ முனைவர்‌. பேராசிரியர்‌.அஜீத்குமார்‌ லால்‌ மோகன்‌, பரிசுகளையும்‌ கேடயங்களையும்‌ சான்றிதழ்களையும்‌ வழங்கி கெளரவித்து சிறப்புரையாறறினார்‌.

குமரகுரு கல்லூரி முதல்வர்‌ முனைவர்‌.விஜிலா எட்வின்‌ கென்னடி வெற்றிபெற்ற வீரர்களை வாழ்த்தினார்‌.

கோவை மாவட்ட கால்பந்து சங்க செயலாளர்‌ .கிருஷ்ணமூர்த்தி மறறும்‌ உறுப்பினர்கள்‌ உடனிருந்தனர்‌.

இப்போட்டிகளில்‌ கால்பந்து வீராங்கனைகள்‌ ஆர்வமுடன்‌ கலந்துகொண்டு விளையாடினர்‌. விளையாட்டு ஆர்வலர்கள்‌ வீராங்கனைகளை உற்சாகப்படுத்தினர்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...