மத்திய அரசைக் கண்டித்து தாராபுரத்தில் திகவினர் ஆர்ப்பாட்டம்

பத்து லட்சம் மக்கள் தொகைக்கு அதிகபட்சம் 100 மருத்துவ மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து தாராபுரத்தில் போராட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திராவிட கழகத்தினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில், பத்து லட்சம் மக்கள் தொகைக்கு அதிகபட்சம் 100 மருத்துவ மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவிப்பு மக்கள் வளர்ச்சிக்கு வீழ்ச்சிக்கா?என கோசங்கள்எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர்கள் பிரபாகரன் உரையாற்றினார் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல் வழக்கறிஞர் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முனீஸ்வரன் மற்றும் பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் ஆசிரியர் முருகேசன் மற்றும் திராவிட கழகத்தைச் சேர்ந்த சித்திக் கிளை அமைப்பாளர் முருகன் ஒன்றிய செயலாளர் தாராபுரம் பெரியசாமி கணியூர் தமிழ் புலிகள் கட்சியின் மேற்கு மண்டல துணைச் செயலாளர் ஒண்டிவீரன் ஆகியோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...