ஆனைமலை நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் - பல்லடத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள ஆனைமலை நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக்கோரி பல்லடத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தேர்தல் நேரத்தில் ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுவேன் என வாக்குறுதி கொடுத்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பதவி ஏற்று 2.5 ஆண்டுகள் ஆகியும் இதுவரை இத்திட்டம் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.



திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ஆனைமலை நல்லாறு திட்டத்தை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கொசவம்பாளையம் பிரிவில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி, பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் இந்து முன்னணி சார்பில் தமிழக அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.



கடந்த அதிமுக ஆட்சியில் ஆனைமலை நல்லாறு திட்டத்திற்கான திட்ட வரைவு அளிக்கப்பட்டும் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் அரசுக்கு எதிராக விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர்.



இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தெரிவிக்கையில், உச்சநீதிமன்றமும், காவிரி மேலாண்மை வாரியமும் உத்தரவு பிறப்பித்தும் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என கர்நாடக முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தமிழக முதல்வர் இதுவரை அதற்கு கண்டன குரல் கூட கொடுக்காமல் இருப்பது காவிரி விவசாயிகளை மட்டுமல்ல தமிழக விவசாயிகளை ஒட்டுமொத்தமாக வஞ்சிப்பதாகவும் உரிமை பறிக்கப்படுவதாகவும் உள்ளது.

அதேபோன்று தேர்தல் நேரத்தில் ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுவேன் என வாக்குறுதி கொடுத்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பதவி ஏற்று 2.5 ஆண்டுகள் ஆகியும் இதுவரை இத்திட்டம் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

மேலும் தமிழ்நாடு மின்சார வாரியம் 50 ஆண்டுகளாக பிஏபி பாசனம் பெற்று வரும் விவசாயிகளின் மின் இணைப்புகளை தண்ணீர் திருடுவதாக கூறி துண்டிப்பது கண்டனத்திற்குரியது. உண்மையாகவே தண்ணீர் திருடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுப்பது ஏற்புடையது அல்ல இதனால் எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...