இ-பைலிங் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு இ-பைலிங் முறை கீழமை நீதிமன்றங்களில் நடைமுறை படுத்துவதை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: பொதுமக்களுக்கும் தங்களுக்கும் கூடுதல் சுமைகளை ஏற்படுத்தும் இ-பைலிங் முறையை கைவிட்டு பழைய நடைமுறையை கொண்டு வர வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்.



தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்களின் சங்கங்களின் கூட்டுக்குழு தலைவர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.



ஆர்ப்பாட்டத்தின் போது, இ பைலிங் நடை முறைக்கு குறித்து நீதிமன்ற ஊழியர்களும் வழக்கறிஞர்களும் இன்னும் முழுமையாக தெரிந்து கொள்ளாத நிலையில், இ-பைலிங் முறை அமல் படுத்தபட்டு இருப்பதாகவும், இதனால் பொதுமக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் அடிக்கடி சர்வர் பிரச்சனை ஏற்படுவதால் இ பைலிங் செய்வதில் சிக்கல் ஏற்படுவதாகவும், வழக்கமான நடைமுறையுடன். இ-பைலிங் முறையும் அமல்படுத்த வேண்டும் என்றும், இ-பைலிங் முறையில் இருக்கும் சிக்கல்கள் சரி செய்த பின் அதை முழுமையாக அமல்படுத்தலாம் எனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே நீதிமன்றங்களில் போதிய ஆட்கள் இல்லாமல் செயல்பட்டு வரும் நிலையில் இது கூடுதல் சுமைகளை ஏற்படுத்துவதாகவும், பொதுமக்களை பாதிக்கும் வகையில் இது இருப்பதால் இ-பைலிங் முறையுடன், பழைய நடைமுறையினையும் செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...