வால்பாறை அருகே எஸ்டேட் பகுதியில் கரடி நடமாட்டம் - தொழிலாளர்கள் அச்சம்

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சுற்றிவரும் கரடியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.


கோவை: கரடி சுற்றும் பகுதிக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது, பொதுவாக காட்டுயானைகள், சிறுத்தைகள், கரடிகள், காட்டு எருமைகள் போன்ற வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருவது வழக்கமாக உள்ளது.இதில் மனித விலங்கு மோதல் எதிர் பாராத விதத்தில் நடக்கிறது.



இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வால்பாறை அருகே மாணிக்கா எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் வட மாநில தொழிலாளி இரண்டு பெண்களை கரடி தாக்கியதில் இருவரும் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் குரங்கு முடி,முருகன் எஸ்டேட் மாணிக்கா எஸ்டேட், போன்ற எஸ்டேட் பகுதியில் கரடி சுற்றி வருவதாக தேயிலை தோட்ட தொழிலாளிகள் வேலை செய்யும் பொழுது தேயிலை தோட்டத்தில் வந்ததாக மக்கள் அச்சம் அடைந்து.



வனத்துறையினருக்கு தெரிவித்தனர் வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்து மாணிக்கா எஸ்டேட் பகுதியில் கரடியை பிடிக்க கூண்டு வைத்து நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். அப்பகுதிக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் மானாம்பள்ளி வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...