ஊடகத்துறையை வலுவிலக்கச் செய்வதே மோடி அரசின் சூழச்சி - கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் புகார்

நாட்டின் நான்காவது ஜனநாயகத்தின் தூண் என்று சொல்லப்படுகிற ஊடகத்துறையை வலுவிலக்கச்செய்வதே மோடி அரசின் சூழ்ச்சியாக உள்ளதாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் குற்றம்சாட்டினார்.


கோவை: மோடி அரசின் பத்திரிக்கை துறை மீதான இந்த அச்சுறுத்தல் நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் கண்டன குரல்கள் வலுத்து வருவதாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நான்காவது ஜனநாயகத்தின் தூண் என்று சொல்லப்படுகிற ஊடகத்துறையை வலுவிலக்கச் செய்வதே மோடி அரசின் சூழ்ச்சியாக உள்ளதாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் குற்றம்சாட்டினார்.

நியூஸ் க்ளிக் என்ற இணையதள பத்திரிகையின் செயல்பாட்டை முடக்குவதற்காக, ஒன்றிய மோடி அரசு டெல்லி போலீசை ஏவி உள்ளது. எவ்வித ஆதராமும் இல்லாமல், சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக போலியான பிம்பத்தை கட்டமைத்து பாஜக அரசின் டெல்லி போலீஸ் சமீபத்தில் வழக்கு பதிவு செய்தது. மேலும், நியூஸ் க்ளிக் உரிமையாளர் பிரபீர் புர்காயஸ்தாவின் வீடு மற்றும் அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மேலும், பிரபீர் புர்காயஸ்தா மற்றும் அந்த நிறுவனத்தின் மனித வள அலுவலர் அமித் சக்ரவர்த்தி ஆகியோர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு, லேப்டாப்கள், கணிணிகள் மற்றும் செல்போன்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. மோடி அரசின் பத்திரிக்கை துறை மீதான இந்த அச்சுறுத்தல் நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் கண்டன குரல்கள் வலுத்து வருகிறது.



இதன் ஒரு பகுதியாக, புதனன்று கோவை சிவானந்தா காலனியில் கோவை மக்கள் சிந்தனை மேடை சார்பில் நியூஸ் க்ளிக் இணைய பத்திரிக்கையின் மீதான ஒன்றிய பாஜக அரசின் அடக்குமுறையை கண்டித்தும், பத்திரிகையாளர்கள் மீதான வழக்குகளை கைவிட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்றார்.

இதில், மக்கள் சிந்தனை மேடையின் ஒருங்கினைப்பாளர் யு.கே.சிவஞானம், சிபிஎம் கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, விவசாய சங்க மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, விதொச மாவட்ட செயலாளர் ஆர்.செல்வராஜ், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அர்ஜூன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் சுதா, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர் ஜோதிகுமார், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.அசார் மற்றும் ஜனநாயக முற்போக்கு அமைப்பை சேர்ந்த திரளானோர் பங்கேற்று, மோடி அரசின் ஊடகத்தின் மீதான அடக்குமுறையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பி.ஆர்.நடராஜன் எம்பி., பேசுகையில், நியூஸ் கிளிக் ஊடகத்தின் மீதான ஒன்றிய அரசின் தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மக்கள் விரோத ஆட்சி நடத்தும் மோடி அரசு, கார்ப்ரேட் ஊடகங்களை வளைத்துப்போட்டு, தனக்கு எதிரான செய்திகள் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது.

அதேநேரத்தில் மோடியின் வலையில் சிக்காத இனைய ஊடகங்கள் மோடியின் மோசடியான செயல்பாடுகளை தொடர்ந்து அம்பலப்படுத்த வருகிறது. இதன்காரணமாகவே நியூஸ் கிளிக் மீதான இந்த அடக்குமுறை என்றே பார்க்க வேண்டியதாக உள்ளது. ஊடகவியலாளர்களை பினையில் வெளிவரமுடியாத வகையில் ஊபா போன்ற பயங்கரவாத சட்டத்தைக்கொண்டு கைது செய்துள்ளது. அவர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு லேப்டாப்,செல்போன்ற உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்துள்ளது.

இப்படித்தான் ஸ்டேன்சுவாமி வீட்டில் கணிணியை பறிமுதல் செய்து, பின்னாளில் மவோ இயக்கத்துடன் தொடர்பு உள்ளதாக, அந்த கணிணியில் மோசடியாகஇனைத்தனர்.

அத்தகைய வேலைகளை செய்வதற்காகத்தான் இதுபோன்ற அடாவடி நடவடிக்கைளை மோடி அரசும், டெல்லி போலீசும் செய்து வருகிறது.

ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடகத்துறை வலுவிலக்கச்செய்ய வேண்டும், தனக்கு எதிராக செய்தி வெளியிடுகிற ஊடகத்தை அச்சுறுத்த வேண்டும் என்பதே மோடி அரசின் பிரதான பணியாக உள்ளது. இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மோடி அரசின் இத்தகைய சூழ்ச்சிக்கு எதிராக ஊடகவியலளார்கள் மட்டுமன்றி அனைத்து தரப்பு ஜனநாயகத்தை நேசிக்கிற அனைவரும் இணைந்து போராட வேண்டும் என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...