அவிநாசி அருகே சர்வதேச பின்னலாடை கண்காட்சி இன்று தொடக்கம்.

அவிநாசியை அடுத்த அணைப்புதூரில் உள்ள இந்திய பின்னலாடை கண்காட்சி சங்கம் (IKFA) வளாகத்தில், அச்சங்கத்தின் சார்பில் 50-வது சர்வதேச பின்னலாடை கண்காட்சி இன்று தொடங்கியது.


திருப்பூர்: இன்று தொடங்கியுள்ள சர்வதேச பின்னலாடை கண்காட்சியில் ஆடை அலங்கார ஃபேஷன் ஷோவும் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த அணைப்புதூரில் உள்ள இந்திய பின்னலாடை கண்காட்சி சங்கம் (IKFA) வளாகத்தில், அச்சங்கத்தின் சார்பில் 50-வது சர்வதேச பின்னலாடை கண்காட்சி இன்று தொடங்கியது. வருகிற 14 ஆம் தேதி வரை இக் கண்காட்சி நடைபெற உள்ளது.



ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (A.E.P.C.), திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், சென்னை கைத்தறி ஆயத்த ஆடை மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் உள்ளிட்டவை பங்களிப்புடன் நடைபெறும் இக்கண்காட்சியில், உலக அளவிலான வர்த்தகர்களின் தற்போதைய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.



14 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 70-க்கும் மேற்ப்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, திருப்பூர், கோவை, சேலம், ஈரோடு, கரூர் மற்றும் கொல்கத்தா பகுதிகளைச் சேர்ந்தவர்களும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் தங்களது நிறுவனத்தின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.

இந்தக் கண்காட்சியை அரேபிய நாடுகள், அமெரிக்கா, உருகுவே, தென் அமெரிக்கா, கொலம்பியா, இங்கிலாந்து, இத்தாலி, கனடா, மொரீசியஸ், ஆஸ்திரேலியா, வங்காளதேசம், சீனா, தெற்கு ஆப்பிரிக்கா, ஜெர்மனி, போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வர்த்தக முகவர்கள் பார்வையிட்டு தங்களது தேவைகளை தேர்வு செய்கின்றனர்.

இக்கண்காட்சியில் ஆடை அலங்கார ஃபேஷன் ஷோவும் நடத்தப்படுகிறது. அதில் தற்போதைய சந்தையில் பெரும்பான்மை இடம் பெற்ற ஆடைகள், நவீனமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளான விளையாட்டு ஆடைகள், ஆக்டிவ் ஆடைகள் ஆகியவை முக்கியமாக இடம் பெறயுள்ளது.

செயற்கை நூலிலே ஆடைகள் தயாரிப்பை திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் செயற்கை நூலிழை துணிகள் தயாரிப்பு நிறுவனத்தினர் அரங்கு அமைத்துள்ளனர். அந்த துணிகளின் ஆடை தயாரிப்பு குறித்து கருத்து அரங்கமும் நடைபெற உள்ளது.



கண்காட்சியில், சிறப்பு எத்திக்கல் பயிற்சி நிறுவன முதன்மை இயக்குனர் பீட்டர் மெக் அலிஸ்டர் பங்கேற்கிறார். ஏ.இ.பி.சி. தலைவர் நரேந்திர கோயங்கா, பியோ தலைவரும் ஐ. ஏ. கே. எஃப். ஏ. தலைவருமான சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்டவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...