தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ பருத்திக்கான விலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில்‌, ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில்‌ இயங்கி வரும்‌ தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத்‌ திட்டத்தின் கீழ் பருத்திக்கான விலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.


கோவை: சேலம்‌ மண்டலத்தில்‌ நிலவிய கடந்த 15 ஆண்டுகால வாலாற்றுப்‌ பருத்தி விலையை ஆய்வு செய்து விவசாயிகள் விற்பனை செய்வதற்கு ஏதுவாக சந்தை ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

பருத்தி உற்பத்தி மற்றும்‌ ஏற்றுமதியில்‌ இந்தியா முன்னணியில்‌ உள்ளது . இத்‌ தொழில்‌ துறையின்‌ தேவைகளை பூர்த்தி செய்ய மொத்த நுகர்வு தேவையில்‌ 10 சதவீதத்திற்கும்‌ குறைவாகவே பருத்தி இறக்குமதி செய்யப்படுகிறது. அமெரிக்காவின்‌ விவசாயத்துறை (USDA) அறிக்கையின்படி, உலகப்‌ பருத்திப்‌ பரப்பில்‌ 40 சதவீத பங்களிப்பில்‌ இந்தியா முதலிடத்தில்‌ உள்ளது. அதேசமயம்‌, சீனா, இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான்‌ மற்றும்‌ பிரேசில்‌ ஆகிய நாடுகள்‌ இணைந்து உலக பருத்தி உற்பத்தியில்‌ 75 சதவீதம்‌ பங்களிக்கிறது.

இந்திய அரசின்‌ ஜவுளி அமைச்சகத்தின்‌ மதிப்பீட்டின்‌ படி, 2022-23 பருவத்தில்‌ 130.61 இலட்சம்‌ எக்டரில்‌ பருத்தி பயிரிடப்பட்டு 34347 இலட்சம்‌ பேல்கள்‌ (1பேல்‌-1 70 கிலோகிராம்‌) உற்பத்தி செய்யப்பட்டுள்ளது . இது பருத்தி பரப்பளவில்‌ முந்தைய ஆண்டை விட ஆறு சதவீதம்‌ அதிகமாகும்‌. குஜராத்தைத்‌ தொடர்ந்து மகாராஷ்டிரா, தெலுங்கானா, இராஜஸ்தான்‌ மற்றும்‌ கர்நாடகாவில்‌ ஆகிய மாநிலங்களில்‌ பருத்தி அதிகளவு பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில்‌, 2022.23ம்‌ ஆண்மீல்‌ பருத்தி 162 இலட்சம்‌ எக்டர் பயிரிடப்பட்டு 3.56 இலட்சம்‌ பேல்கள்‌ உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. உவை முந்தையஆண்டைக்‌ காட்டிலும்‌ பரப்பளவில்‌ 10 சதவீதம்‌ அதிகரித்துள்ளது. பொம்பலூர்‌, சேலம்‌, தருமபுரி, அரியலூர்‌, திருச்சி, விருதுநகர்‌, மதுரை மற்றும்‌ கடலூர்‌ ஆகியவை பருத்தி உற்பத்தி செய்யும்‌ மாவட்டங்களாகும்‌.

வர்த்தக ஆதாரங்களின்பட, ராஜஸ்தான்‌, பஞ்சாப்‌ மற்றும்‌ ஹரியானாவில்‌ சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ள போதிலும்‌, வட இந்தியாவில்‌ பருத்தி உற்பத்தியானது இளஞ்சிகப்புகாய்ப்‌ புழு (PBW) தாக்குதலால்‌ பாதிக்கப்‌ பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பருத்தி உற்பத்தி மற்றும்‌ நுகர்வுக்‌ குழுவின்‌ (COCPC) படி, 2023.24 ஆம்‌ ஆண்டில்‌, இந்தியாவின்‌ மொத்த பருத்தி ஏற்றுமதி இரண்டு மில்லியன்‌ பேல்களை எட்டி யுள்ளது, இது முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்‌ போது 74 சதவீத உயர்வாக உள்ளது.

விலை முன்னறிவிப்புத்‌ திட்டம்‌, சேலம்‌ மண்டலத்தில்‌ நிலவிய கடந்த 15 ஆண்டுகால வாலாற்றுப்‌ பருத்தி விலையை ஆய்வு செய்து _ விவசாயிகள்‌ விற்பனை மற்றும்‌ விதைப்பு முடிவுகளை எடுப்பதற்கு வசதியாக சந்தைக்‌ ஆய்வுகளை நடத்தியது.

விற்பனை முடிவு

ஆய்வு முடிவுகளின்படி, (அக்டோபர்‌-நவம்பர்‌'23) நல்ல தரமான பருத்தியின்‌ பண்ணை விலை குவிண்டாலுக்கு ரூ. 6800-7000 ஆக இருக்கும்‌. எனவே, விவசாயிகள்‌ அதற்கேற்ப விற்பனை முடிவு எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

விதைப்பு முடிவு

இந்த பருவத்தில்‌ விதைக்கப்பட்ட பருத்தியின்‌ விலை ஜன வரி-பிப்ரவரி 2024ல்‌ குவிண்டாலுக்கு ரூ. 7100 கிடைக்கும்‌. எனவே, விவசாயிகள்‌ அதற்கேற்ப விதைப்பு முடிவுகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்‌. வடகிழக்கு பருவமழை மற்றும்‌ பிற மாநிலங்களில்‌ இருந்து வரும்‌ வரத்தின்‌ அடிப்படையில்‌ விலையில்‌ ஏற்றத்‌ தாழ்வுகள்‌ இருக்கலாம்‌.

மேலும்‌ விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்‌

1. உள்நாட்டு மற்றும்‌ ஏற்றுமதி சந்தைத்‌ தகவல்‌ மையம்‌

வேளாண்‌ மற்றும்‌ ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்‌

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌

கோயம்புத்தூர்‌ 641003

தொலைபேசி : 0422-2431405

2. இயக்குனர்‌ மற்றும்‌ ஒருங்கிணைப்பு அதிகாரி

நீர்மற்றும்‌ புவியியல்‌ ஆய்வு மையம்‌

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌

கோயம்புத்தூர்‌ 641003

தொலைபேசி : 0422-6611275

தொழில்நுட்பவிவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்‌

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌ பருத்தி துறை

தமிழ்நாடுவேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌

கோயம்புத்தூர்‌ 641003

தொலை பேசி -0422-2456297

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...