100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த கோரிக்கை- கோவை அருகே பெண்கள் போராட்டம்

பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சோமயம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடத்த ஆர்ப்பாட்டத்தில் நிலுவையில் உள்ள 4 மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.


கோவை: கோவை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பெண்கள் போராட்டம் நடத்தினர்.



கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சோமயம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களுக்கு நான்கு மாதமாக சம்பளம் வழங்காமல் காலதாமதம் செய்து கொண்டிருப்பதை கண்டித்தும் 100 நாள் வேலையை 200 நாளாக அமல்படுத்த கோரியும் கோவை மாவட்ட விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கே வி தனபால் தலைமை தாங்கினார்.



கோவை மாவட்ட விவசாய தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவர் தோழர் ஆர் செல்வராஜ், பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தோழர் R. கேசவ மணி அவர்களும் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தின் கட்சி செயலாளர் மோகன்ராஜ் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தோழர் ஏ. ஆர்.துரைசாமி சுப்பிரமணியம் , கோகுல் கிருஷ்ணன் மற்றும் 77 விவசாயம் பெண் தொழிலாளர் தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...