மடத்துக்குளம் அருகே தடை செய்யபட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது

மடத்துக்குளம் அருகே தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: ஆராயிரம் எண்ணிக்கையிலான கேரளா லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்த போலீசார், அவற்றை விற்பனை செய்தவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கணியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரத் தொழுவில் சட்டவிரோதமாக கேரள மாநில லாட்டரிகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் சென்ற போலீசார், பெட்ரோல் பங்க் அருகே விசாரணை நடத்திக்கொண்டிருந்தார்.

அப்போது, காரத்தொழுவைச் சேர்ந்த சின்னராசு மகன் பொன்னுச்சாமி(55) என்பவர் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.



இதனையடுத்து, அவர் வைத்திருந்த சுமார் 6000 எண்ணிக்கையிலான கேரள மாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்த போலீசார், பொன்னுசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...