இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு - தாராபுரம் காவல் நிலையம் முற்றுகை

சென்னிமலையில் கல்குவாரி மலையாக மாற்றும் கிறிஸ்தவ அமைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த இந்து முன்னணி அமைப்புக்கு அனுமதி மறுக்கபட்டது. இதனால் தாராபுரம் காவல் நிலையத்தை அவர்கள் முற்றுகையிட்டனர்


திருப்பூர்: இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதிமறுத்ததால் தாராபுரம் காவல் நிலையம் முற்றுகை

சென்னிமலையில் நடைபெற உள்ள இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு, அனுமதி மறுத்ததை கண்டித்து, காவல் நிலையத்தை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டனர்.

சென்னிமலையை கல்குவாரி மலையாக மாற்றும் என கிறிஸ்தவ அமைப்பினர் கூறியதாகவும் அதை கண்டித்து சென்னிமலையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு இந்து முன்னணியினர் அனுமதி கேட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு, அரசு அனுமதி அளிக்க மறுப்பதாக கூறி, இந்து முன்னணி மாவட்ட நிர்வாகிகள் தவமணி பாலு, கதிரேசன் உள்ளிட்ட இந்து முன்னணி அமைப்பினர், தாராபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர், அனுமதி மறுத்ததை கண்டித்து தாராபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு, காவல் நிலையத்தில் மீண்டும் மனு அளித்து சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...