உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் உடுமலை அருகே செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயினறவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

உடுமலை அருகே செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. உடுமலை அருகே எலையமுத்தூர் சாலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு மின்சார பணியாளர், பொருத்துநர், கம்மியார் மோட்டார் வாகனம், கம்பியாள், பற்ற வைப்பவர் உள்ளிட்ட பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.இந்த சூழலில் நடப்பாண்டில் புதிதாக இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் & டிஜிட்டல் மேணுபேக்ச்சரிங் டெக்னீசியன், மேணுபேக்ச்சரிங் பிராசஸ் கண்ட்ரோல் & ஆட்டோமேஷன்,அட்வான்ஸ் சி.என்.சி மெஷின் & டெக்னீசியன் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது.

அதுமட்டுமின்றி அரசு உதவிகளுடன் பயிற்சியின் போதே தொழில் நிறுவனங்களில் உதவித் தொகையுடன் பயிற்சி, பயிற்சி முடித்தவுடன் மத்திய மாநில அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு, மாதாந்திர உதவித் தொகையும் வழங்கப்படுவதால் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்தோடு சேர்ந்து படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் நடப்பு ஆண்டில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. விழாவிற்கு உடுமலை அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் என்.வி. நதிச்சந்திரன் தலைமை வகித்தார்.

வால்பாறை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் குணசேகரன் முன்னிலை வகித்தார். பயிற்சி அலுவலர் ரமேஷ்குமார் வரவேற்புரை ஆற்றினார். இதில் சிறப்பு விருந்தினராக உடுமலை நகர மன்றத் தலைவர் மு.மத்தீன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்.

இதில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி நாகராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக உதவி பயிற்சி அலுவலர் அலுவலர் மாரிமுத்து நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...