வால்பாறை அருகே கபாலி யானையிடம் கலாட்டா செய்த கேரளா சுற்றுலா பயணி கைது

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கபாலி என்று அழைக்கப்படும் காட்டு யானையை தொந்தரவு செய்த சுற்றுலா பயணியை கேரளா வனத்துறையினர் கைது செய்தனர்.


கோவை: யானையின் அருகே சென்று நடனமாடி வீடியோ எடுத்து சேட்டையில் ஈடுபட்ட சபீர் என்ற நபரை கேரளா வனத்துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கபாலி என்று அழைக்கப்படும் காட்டு யானையை தொந்தரவு செய்த சுற்றுலா பயணியை கேரளா வனத்துறையினர் கைது செய்தனர். திருசூர் மாவட்டம் சாலக்குடியில் இருந்து வால்பாறை செல்லும் ரோட்டில் யானைகள் தனித்தனியாக கூட்டம் கூட்டமாக முகாமிட்டு உள்ளது.

சாலக்குடி பகுதியில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வால்பாறையில் இருந்து காட்டு வழியாக செல்கின்றனர்.



அதிரப்பள்ளி ரோட்டில் கடந்த ஒரு வாரமாக கபாலி என அழைக்கப்படும் ஒற்றை யானை சுற்றுலா வாகனங்களை தொந்தரவு செய்யும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

இந்நிலையில் கேரள மாநிலம் கைப்பமங்கலம் என்ற பகுதியை சேர்ந்த சபீர் வயது 38 என்பவர் வால்பாறைக்கு சுற்றுலா வந்தார். அதன்பின் அதிரப்பள்ளியில் இருந்து சாலக்குடி நோக்கி சென்றார். அப்போது அம்பலப்பாறை ரோட்டில் அருகில் கபாலி யானை வழக்கம் போல் நின்றுள்ளது. சுதாரித்துக் கொண்ட சுற்றுலா பயணிகள் வாகனங்களை பாதுகாப்பாக பின்நோக்கி நகரத்தினர்.



அப்போது சபீர் யானையின் அருகே சென்று நடனமாடி வீடியோ எடுத்து சேட்டையில் ஈடுபட்டுள்ளார். யானை சாலையில் நின்ற வாகனத்தை சேதப்படுத்தியது. வாகனத்தில் இருந்தவர்கள் அருகில் நின்ற பேருந்துக்கு சென்று தப்பினர்.

அந்த சம்பவத்தை கேரளா அரசு பஸ்ஸில் பயணம் செய்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு விட்டார்.



இதனை தொடர்ந்து கேரளா வனத்துறையினர் கபாலி யானையை தொந்தரவு செய்து சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தல் செய்ததால் கேரளா வனத்துறையினர் சபீரை கைது செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...