வரும் 16-ம் தேதி சென்னையில் உண்ணாநிலை - திருப்பூர் மாவட்ட கிரில் ஒர்க்ஷாப் உரிமையாளர்கள் சங்கம் முடிவு

மின் கட்டண உயர்வுக்கு எதிராக வரும் 16-ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட திருப்பூர் மாவட்ட கிரில் ஒர்க்ஷாப் உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.


திருப்பூர்: தமிழக அரசு 3பி கட்டணத்தை 3 ஏ முறைக்கு மாற்றி அமைத்திருப்பதை மறுபரிசீலினை செய்ய வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட கிரில் ஒர்க்ஷாப் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள தொழில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் ஒன்றினைந்து மின்துகர்வோர் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டமைப்பு சார்பில் 430 சதவீதம் உயர்த்திய நிலைக்கட்டணம், பரபரப்பு நேர (பீக் ஹவர்) கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும். ‘3பி’யில் இருந்து ‘3ஏ1’ நடைமுறைக்கு மாற்றி சிறு, குறு நிறுவனங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சோலார் மேற்கூரை நெட் வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். 2 ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.



இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கிரில் ஒர்க்க்ஷாப் உரிமையாளர்கள் நலசங்கத்தின் பொதுக்குழுக்கூட்டம் திருப்பூரில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.

இதில் திருப்பூர் மாவட்ட தலைவராக தாமஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார், பொருளாளராக பாலமுருகன் மற்றும் துணை செயலாளர் பார்த்திபன், ஹரிகரன் மகுடீஸ்வரன், உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

இதில் மாவட்டம் முழுவதிலிமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஒர்க்ஷாப் உரிமையாளர்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டனர் :

இதில் குரிப்பாக மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 16-ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் தெரிவித்திருக்கிறார்கள். அந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவளித்து அனைத்து கிரில் ஒர்க்ஷாப் உரிமையாளர்களும் கலந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு 3பி கட்டணத்தை 3 ஏ முறைக்கு மாற்றி அமைத்திருப்பதாக அறிவித்திருந்தாலும் அது ஒர்க்ஷாப் தொழிலுக்கு பொருந்தாது எனவே தமிழக அரசு அதை மறுபரிசீலினை செய்ய வேண்டும்.

கடந்த காலங்களில் வெல்டிங் செய்ய அதிக திறன் கொண்ட ட்ரான்ஸ்பார்மர்கள் பயண்படுத்தி வந்தநிலை மாறி நவீன காலநிலைக்கு ஏற்ப குறைந்த மின் செலவில் வெல்டிங் செய்யும் தொழில் நுட்பங்கள் வந்து விட்டது எனவே பீக்ஹவர் என கூறப்படும் காலை, மாலை 6 முதல் 10 மணிவரையிலான நேரங்களிலும் வெல்டிங் செய்ய அனுமதி அளிக்கவேண்டும், சிறு பழுது பார்ப்பு பணிகளுக்காக வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று பணிசெய்வதற்கு முன்அனுமதி பெற வேண்டும் என்ற மின்வாரியத்தின் கெடுபிடியை ரத்துசெய்யவேண்டும் என்பன உள்ளிடட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளதாக அச்சங்கத்தின் மாவட்ட நிர்வாகி செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...