தமிழக கால்பந்து அணிக்கு உடுமலை மாணவி காவியாழினி தேர்வு - ராஞ்சியில் நடைபெறும் போட்டியிலும் பங்கேற்பு

14 வயது மாணவியர் பிரிவில் உடுமலை அருகே பெதம்பம்பட்டி என்.வி.மெட்ரிக் பள்ளி மாணவி காவியாழினி வெற்றி பெற்று தமிழக கால்பந்து அணிக்கு தேர்வாகியுள்ளார்.


திருப்பூர்: தமிழக கால்பந்து அணிக்கு தேர்வாகியுள்ள மாணவி, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கால்பந்து போட்டியிலும் பங்கேற்க உள்ளார்.

இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் ஹாக்கி, வாலிபால், கூடைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு அதன் வாயிலாக மாநில அணிக்கான வீரங்கணைகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக கால்பந்து அணிக்காக 14 வயது மாணவியர் பிரிவில் உடுமலை அருகே பெதம்பம்பட்டி என்.வி.மெட்ரிக் பள்ளி மாணவி காவியாழினி வெற்றி பெற்று தமிழக கால்பந்து அணிக்கு தேர்வாகியுள்ளார். மேலும் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கால்பந்து போட்டியிலும் இவர் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...