தாராபுரத்தில் வரும் 29ம் தேதி மனைவி நல வேட்பு விழா - முன்பதிவு செய்ய அழைப்பு

தாராபுரம் மனவளக்கலை மன்ற அறிவுத் திருக்கோவில் மன்ற அறக்கட்டளையின் அறங்காவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டத்தில் வரும் 29ஆம் தேதி மனைவி நல வேட்பு விழா நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: மனைவி நல வேட்பு விழாவில் 100- க்கும் மேற்பட்ட தம்பதியினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் கணவன், மனைவி இருவரும் தம்பதியராகக் கலந்துகொண்டு திருமண நாளை நினைவுப்படுத்தி பேசலாம் என தெரிவிக்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மனவளக்கலை மன்ற அறிவுத் திருக்கோவில் மன்ற அறக்கட்டளையின் அறங்காவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டம் அண்ணா நகரில் உள்ள மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அறக்கட்டளையின் இந்த வருடத்திற்கான முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. அவ்விழாவில் பெண்களின் பெருமையாக மனைவி நல வேட்பு விழா நடத்தப்பட உள்ளது.



விழா வருகின்ற 29-ந்தேதி தாராபுரம்-உடுமலை ரோட்டில் உள்ள அரிமா அரங்கத்தில் நடைபெற உள்ளது. விழாவில் ஆழியார் உலக சமுதாய சேவா சங்கத்தின் விசன் இணை இயக்குனர் பேராசிரியர் அருட்செல்வி மனைவியின் மாண்பு பற்றியும், திருச்சி பேராசிரியர் நீலகண்டன் வாழ்வியலில் வேதாத்திரியம் என்கிற தலைப்பிலும் பேச உள்ளனர்.

மனைவி நல வேட்பு விழாவில் 100-க்கும் மேற்பட்ட தம்பதியினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் கணவன், மனைவி இருவரும் தம்பதியராகக் கலந்துகொண்டு திருமண நாளை நினைவில் நிறுத்தி தியாகத்தின் திரு உருவமாம் மனைவியின் மாண்பைப் போற்றும் விழாவாக இந்த விழா அமைய உள்ளது. இதில் கலந்துகொண்டு பயன் பெற முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...