விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் முத்தையன் கோவிலில் வழிபாடு

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள விவசாயி முத்தையன் கோவிலில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் மலர்தூவி வழிபாடு நடத்தினர்.


: திருப்பூர்: ஆங்கிலேயர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட விவசாயி முத்தையனின் கோவிலில் சிறப்பு பூஜை.

குண்டடம் அடுத்துள்ள வெருவேடம்பாளையத்தில் ஆங்கிலேயனுக்கு வரிகொடுக்க மறுத்ததால், ஆங்கிலேயர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட விவசாயி முத்தையனுக்கு கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று விஸ்வ இந்து பரிஷத் சார்பில் நடைபெற்று வரும் போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு யாத்திரை குழுவினர் வந்தனர்.



அவர்களை வெருவேடம்பாளையம் கிராம மக்கள் வரவேற்றனர். தொடர்ந்து அக்குழுவினர் முத்தையன் கோவிலில் சூடம் எற்றி, மலர்தூவி வழிபாடு நடத்தினர்.

அதன் பின்னர் விஷ்வ இந்து பரிஷத் மாநில அமைப்பாளர் பீமராவ் முத்தையனின் வரலாற்றை விவரித்து பேசியதோடு யாத்திரையின் நோக்கங்களையும் விளக்கிப் பேசினார். இதில் மாநில இணை அமைப்பாளர் சிவபிரபாகர், மாநில பொருளாளர் பாலு, மாநில பொருப்பாளர் கணேஷ்பாபு, கோட்ட அமைப்பாளர் சேனாதிபதி, மாவட்ட செயலாளர் பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.



கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் மாவட்ட பொருப்பாளர் தமிழ்செல்வன், பா.ஜனதா மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் மாவட்ட செயலாளர் கந்தசாமி, உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் மாவட்ட செயலாளர் விஜயகுமார், கூட்டுறவு மேலாண்மை பிரிவின் குண்டடம் ஒன்றிய தலைவர் வேலுசாமி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...