தேசிய பேரிடர் இன்னல் குறைப்பு நாள் - கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஒத்திகை

கோவை மாவட்டம் வால்பாறை கலை கல்லூரியில் தீயணைப்பு துறையினர் சார்பாக தேசிய பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி மற்றும் பேரணி நடைபெற்றது.


கோவை: இயற்கை மற்றும் செயற்கை பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்படும் மீட்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை ஆண்டு தோறும் அக்டோபர் 13 ம் தேதி சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.



மழைக்காலங்களில் பேரிடர் ஏற்படும் போது பொதுமக்கள் தற்காத்து கொள்வது குறித்தும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.



வால்பாறை அரசு கலை கல்லூரி வளாகத்தில் தீ அணைப்பு துறையினர் மற்றும் வட்டசியர் மற்றும் அரசு ஊழியர்கள் முன்னிலையில் ஒத்திகை நிகழ்ச்சியில்

தீயணைப்பு துறையினர் பல்வேறு பேரிடர் மீட்பு பொருட்களை கொண்டு, பாதிக்கப்பட்டோரை காப்பாற்றுவது குறித்து செயல் விளக்கங்களையும், தீயணைப்பு அலுவலர்கள் செய்து காட்டினர்.



இயற்கை மற்றும் செயற்கை பேரிடர் காலங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் உயிர் சேதம் ஏற்படாமல் செயலாற்ற வேண்டியது,காயம் அடைந்தவர்களை எவ்வாறு மீட்பது மற்றும் வீட்டில் சிலிண்டர் கேஷ் தீ பற்றினால் அணைப்பது எவ்வாறு என்று செயல் விளக்கம் முறையில் தெரிவித்தனர் மேலும் பெரிய அடுக்கு மாடி கட்டிடங்களில் தீ பிடித்தாள் எவ்வாறு தீ அணைப்பு துறையினர் தீயை அணைப்பது குறித்து செயல் விளக்கம் தொடர்பான ஆலோசனைகளை தீயணைப்பு அலுவலர்கள் மாணவ மாணவிகளுக்கு வழங்கினர். பின்பு கல்லூரி வளாகத்தில் இருந்து காந்தி சிலை வரை பேரணி நடைபெற்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...