தாராபுரம் அரசு கல்லூரியில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு முகாம்

தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு வார விழா அக்கல்லூரியில் நடைபெற்றது.


திருப்பூர்: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நன்மைகளும், அதனை எதிர்கொள்ளும் சவால்களும் குறித்து தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு வார விழாவில் பேராசிரியர்கள் பேசினர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு வார விழா கல்லூரியில் நடைபெற்றது.



விழாவிற்கு கல்லூரி முதல்வர் க.பத்மாவதி தலைமை தாங்கினார். ஆங்கிலத்துறை விரிவுரையாளர் சத்யா அனைவரையும் வரவேற்றார். வேதியியல் துறை விரிவுரையாளர் கனகராஜ் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

ஆங்கிலத்துறை இணை பேராசிரியர் சிவசாமி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நன்மைகளும், அதனை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து தொகுத்து கூறினார். தமிழ் துறை பேராசிரியர் கீதா ராமன் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து அதனை கவிதைகளாக விளக்கினார்.

வணிகவியல் துறை விரிவுரையாளர் வெங்கட்ரமணன் வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக விழா ஏற்பாடுகளை ஆங்கிலத்துறை கவுரவ விரிவுரையாளர்கள் கார்த்திகேயன் மற்றும் சுதாகர் ஆகியோர் நன்றி கூறினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...