குண்டடம் அருகே மனைவியை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது

குண்டடம் அருகே உள்ள எரகாம்பட்டியில் அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுப்பதாக மனைவி அளித்த புகாரின் பேரில் அவரது கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: கணவன் கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் அளிக்க சென்றபோது காரின் கண்ணாடிகளை உடைத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள எரகாம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 44). இவரது மனைவி சந்தியா. இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்தியாவை அவருடைய கணவர் சுரேஷ்குமார் அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து போலீசில் புகார் கொடுக்க காரில் குண்டடம் சென்று ஒரு பேக்கரி முன்பு காரை நிறுத்தி விட்டு போலீஸ் நிலையத்திற்கு சந்தியா சென்றார்.

அப்போது அங்கு வந்த சுரேஷ்குமார் காரின் கண்ணாடிகளை உடைத்துவிட்டார். இதையடுத்து சந்தியா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...