உடுமலை அமராவதி அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

விவசாயிகள் கோரிக்கையை ஏற்று உடுமலை அமராவதி அணையில் இருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்து வருவதால் விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள பொதுப்பணித்துறை கோரிக்கை.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணை பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு நெல் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருவதாக விவசாயிகள் தரப்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில் இன்று முதல் 15 நாட்களுக்கு செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஆற்றுபகுதியிலும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாயில் தண்ணீரை திறந்து வைத்தார்.

இதன்மூலம் 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்து வருவதால் விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ், வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அணிகடவு கிரி, மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரசாமி, எலையமுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...