தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 உயர்வு - பொதுமக்கள் அதிருப்தி

சர்வதேச அளவில் நடைபெறும் இஸ்ரேல் - ஹமாஸ் போரால் தங்கத்தின் விலை உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: தங்கம் விலை உயர்ந்து வந்தாலும் அடிப்படை தேவைகளுக்காக தங்கத்தை பொதுமக்கள் வாங்கி வருகின்றனர்.

பொதுமக்களின் அன்றாட தேவைகளுக்குள் ஆடம்பர பொருட்களான தங்கம் வராது என்றாலும், அன்றாடும் பொதுமக்களின் நுகர்வு தங்கத்தில் இருக்கும் என்பதிக் மாற்றுக்கருத்து இல்லை. அதன் அடிப்படையில் கல்யாணம், காதுகுத்து, விழாக்காலங்களான தீபாவளி, பொங்கல், முகூர்த்த நாட்களில் பொதுமக்கள் தங்கம் வாங்குவதனை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். முதலீடாக தங்கம் வாங்குவொர், மார்கெட்டில் தங்கத்தின் விலை குறைகின்ற காலத்தில் வாங்குவர்.

இந்த நிலையில் சமீப காலங்கலாக தங்கத்தின் விலை குறைந்திருந்த நிலையில் பலர், தங்க நகைகளை வாங்கி வந்தனர்.



இந்த நிலையிலே தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் ஒரே நாளில் உயர்ந்திருக்கின்றது. வழக்கமாக 50 ரூபாய் 100 ரூபாய் என ஏற்றம் இறக்கம் காணப்பட்ட நிலையில், தங்கத்தின் விலை ஒரே நாளில் உச்சத்தை தொட்டிருக்கின்றன.



சர்வதேச அளவில் நடக்கும் அரசியல் மற்றும் இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தம் தங்கம் விலை உயர்வுக்கு வழி வகுத்திருக்கின்றன. இந்திய வர்த்தகம் அமெரிக்க டாலர் அடிப்படையில் நடப்பதனால், யூ.எஸ். டாலர் பண மதிப்பு ஏற்றம் இறக்கம் தங்கம் விலை நிர்ணயத்தில் பிரதிபலிகின்றன. தமிழ் மாதங்களில் புரட்டாசி முடிந்து ஐப்பசி ஆரம்பமாகின்ற நிலையில், ஏராளமான சுப நிகழ்வுகள் நடக்க ஆரம்பிக்கும். இதற்காக தங்கம் வாங்க நினைப்போர் தற்போது தங்கத்தின் விலை ஏற்றம் கண்டதனால் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

திட்டமிட்ட தொகையில் அனைத்து நகைகளையும் வாங்க முடியவில்லை என்றாலும், விசேசங்களுக்கும், விழாக்களுக்கும், அடிப்படை தேவைக்குமான தங்க நகைகளை முதலில் வாங்குவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தங்கம் விலை ஏற்றம் இறக்கம் இயல்பானது. சர்வதேச அரசியல் இஸ்ரேல் ஹமாஸ் போர், யூ.எஸ். டாலர் உள்ளிட்டவற்றால் தங்கம் விலை முன்பைவிட கணிசமாக உயர்ந்திருக்கின்றன. தங்க நகையின் விலை ஒவ்வொரு வருடமும் கணிசமாக உயர்ந்திருக்கின்றன. விழாக்களில் பொதுமக்கள் தங்க நுகர்வு நிலையாக இருக்கும் என விற்பனையாளர் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...