வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌‌ மிட்டாய்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ அடுமனைப்‌ பொருட்கள்‌ மற்றும்‌ மிட்டாய்கள்‌ தயாரிக்கும்‌ இரண்டு நாட்கள்‌ பயிற்சி நடைபெற உள்ளது.


: கோவை: சாக்லேட் மற்றும் மிட்டாய் வகைகளை எளிய முறையில் தயாரிப்பதற்கான பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு.

அடுமனைஉணவுப்‌ பொருட்கள, சாக்லேட்‌ மற்றும்‌ மிட்டாய்‌ வகைகளுக்கு தற்பொழுது மக்கள்‌ மத்தியில்‌, அதிக வரவேற்பு உள்ளது. அதற்கான முக்கியக்‌ காரணம்‌ விரும்பத்தக்க வகையிலும்‌ சுவைகளிலும்‌ மிக எளிதில்‌ இவை கிடைப்பதேயாகும்‌. இந்தப்பயிற்சி சிறுதொழில்‌ முனைவோருக்கு தங்களது வருமானத்தைப்‌ பெருக்க பெரிதும்‌ உதவியாக இருக்கும்‌. ஆகவே, பயிற்சியின் போது கீழ்க்காணும்‌ அடுமனைப்‌ பொருட்கள, சாக்லேட்‌ மற்றும்‌ மிட்டாய்‌ வகைகள்‌ எளிய முறையில்‌ தயாரிப்பதற்கான தொழில்நுட்பப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

* ரொட்டி வகைகள்‌

* கேக்மற்றும்‌ பிஸ்கட்‌

* சாக்லேட்‌

* கடலை மிட்டாய்‌

* சர்க்கரை மிட்டாய்‌

இத்தொழிலநுட்பத்தில்‌ ஆர்வமுள்ளவர்கள்‌ ரூ.1770 செலுத்தி தங்கள்‌ பெயரைப்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌.

பயிற்சி நடைபெறும்‌ இடம்‌ - அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌

வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌

கோயம்புத்தூர்- 641 003

பேருந்து நிறுத்தம்‌ - வாயில்‌ எண்‌.7, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, மருதமலை சாலை வழியாக, கோயம்புத்தூர்‌ - 641003

மேலும்‌ விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌,

அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌,

வேளாண்மைப்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்‌ - 641003.

தொலைபேசி எண்‌- 94885 18268

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...