தனிநபர் கடன் பெற்றுத்தருவதாக மோசடி செய்தவரிடம் இருந்து பணத்தை பெற்றுத்தர பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி மற்றும் காங்கேயம் பகுதிகளில் தனிநபர் கடன் பெற்று தருவதாக கூறி பணம் வசூலித்து ஏமாற்றியவர் கைது செய்யப்பட்ட நிலையில் தங்கள் பணத்தை உடனடியாக மீட்டு தரக் கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: மோசடி செய்தவர்களிடமிருந்து பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி சக்தி நகர் பகுதி மற்றும் காங்கேயம் பகுதியில் என்.கே.பி பைனான்ஸ் சர்விஸ் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு அங்குள்ள பொதுமக்களிடம் தனி நபர் கடன் எளிதில் பெற்று தருவதாக கூறி பத்து பேர் கொண்ட குழுவை அமைத்து நபர் ஒருவருக்கு 1,341 ரூபாய் வீதம் பத்து நபர்களிடம் 13,410 ருபாய் எனவும், ஒரு லட்சம் ரூபாய் கடன் பெறுவதற்கு 5 சதவீதம் என 5000 ரூபாய் என வெவ்வேறு வகையில் அவிநாசி மற்றும் காங்கேயம் பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூலித்துள்ளனர்.

பணம் கட்டியவர்களை நம்ப வைப்பதற்காக ஒரு சிலருக்கு கடன் பெற்று தந்ததாக காசோலைகளை வழங்கி உள்ளனர். ஆனால் அந்த காசோலைகளில் பணம் இல்லாமல் திரும்ப வந்துள்ளது. பணம் வசூலித்து பல நாட்கள் ஆகியும் கடன் பெற்று தராததால் கடந்த பத்தாம் தேதி நிறுவனத்திற்கு சென்று பார்த்தபோது அவிநாசி மற்றும் காங்கேயம் பகுதிகளில் நிறுவனம் அடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து அவினாசி காவல் நிலையம் மற்றும் காங்கேயம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்துள்ளனர். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது திருப்பூர் மட்டுமல்லாது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இது போன்று நிறுவனம் அமைத்து பல நபர்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி என் கே பி பைனான்ஸ் எனும் நிறுவனத்தின் உரிமையாளர் நிர்மல் குமார் என்பவரை கைது செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து வந்துள்ளனர்.



இதனை அறிந்த பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு திரண்டனர் தங்கள் பணத்தை உடனடியாக மீட்டு தர வேண்டும் என கூறி திருப்பூர் பல்லடம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பாதிக்கப்பட்ட பொது மக்களோடு சேர்ந்து அந்நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களும் தங்களுக்கு இரண்டு மாத ஊதியம் தரவில்லை என மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



இதனை தொடர்ந்து காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சு வார்த்தை நடத்தினர். இதனிடையே பல்லடம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களோடு அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...