உடுமலை அமராவதி நகரில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் ஏராளமானோர் பங்கேற்பு

அருள்மிகு எழுமலையாண் கோவில் புரட்டாசி மாதம் 4 வது சனிக்கிழமை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட காவல் துறை, ராயல் அரிமா சங்கம், உடுமலை ஶ்ரீ சக்ரா மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாமை நடத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி நகர் பகுதியில் மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அருள்மிகு எழுமலையாண் கோவில் புரட்டாசி மாதம் 4 வது சனிக்கிழமை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட காவல் துறை, ராயல் அரிமா சங்கம், உடுமலை ஶ்ரீ சக்ரா மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.



இந்த மருத்துவ முகாமில் சக்கரை நோய் , இரத்த அழுத்தம், சளி, காய்ச்சல் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தேவைப்படும் பக்தர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இந்த மருத்துவ முகாமில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.



இந்த நிகழ்வில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி.வ ஜெயராமன், ராயல் அரிமா சங்க நிர்வாகிகள், ஶ்ரீ சக்ரா மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...