உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழா சொற்பொழிவு போட்டி

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சொற்பொழிவு போட்டியில் மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.


திருப்பூர்: உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சொற்பொழிவு போட்டி நடைபெற்றது

உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழா சொற்பொழிவு போட்டி நடைபெற்றது. பள்ளி தமிழ் இலக்கிய மன்ற செயல்பாடுகளின் ஒரு பகுதியாக சட்டமன்ற நாயகர் கலைஞரின் சட்டமன்ற சாதனைகள் குறித்த பள்ளி அளவிலான சொற்பொழிவுப் போட்டியினை பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஏ.ஜெயராஜ் தொடங்கி வைத்தார்.

போட்டியின் நடுவர்களாக தமிழ் இலக்கிய மன்றச் செயலாளர் வே.சின்னராசு, தமிழாசிரியர் ஆர். ராஜேந்திரன், முதுகலை ஆசிரியை ராஜேஸ்வரி ஆகியோர் செயல்பட்டனர்.

சொற்பொழிவு போட்டியில் 9-ம் வகுப்பு மாணவிகள் ச. தேன்மொழி முதலிடமும், சா கவியரசி 2-ம் இடமும் அ.கார்த்திகா 3-ம் இடமும் பெற்றனர். இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்சி மாணவியர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...