கூட்டணி முடிவு சரவெடி, இனிதான் அதிரடி - கோவையில் போஸ்டர் ஒட்டிய அதிமுகவினர்

கூட்டணி முடிவு சரவெடி இனி தான் அதிரடி என்ற வாசகங்களுடன் கோவையில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர்.


கோவை: கோவை லங்கா கார்னர், டவுன்ஹால், காந்திபுரம் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் கூட்டணி முடிவு சரவெடி இனி தான் அதிரடி என்ற வாசகங்களுடன் அதிமுகவினர் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக சமீபத்தில் வெளியேறியது. இந்நிலையில் மீண்டும் பாஜக அதிமுக இடையே கூட்டணி ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தது. இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக தெரிவித்தார்.

இந்நிலையில் "கூட்டணி முடிவு சரவெடி" என்றும் "இனிதான் அதிரடி" என்ற வாசகங்களுடன் 40க்கு 40 என்று மக்களவைத் தொகுதி எண்ணிக்கையை குறிப்பிட்டு அதிமுக சார்பில் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளது. கோவை லங்கா கார்னர், டவுன்ஹால், காந்திபுரம் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் இந்த சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...