திருப்பூரில் ஏழை மக்கள் பயன் பெறும் வகையில் இலவச சட்ட உதவி மையம் திறப்பு

பல்லடம் அருகே இயங்கி வரும் கே.எம்.சி சட்ட கல்லூரியில் இன்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உடன் இணைந்து இலவச சட்ட உதவி மையம் திறப்பு விழா நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற முதன்மை நீதிபதி ஸ்வர்ணம்.ஜே.நடராஜன் கலந்துகொண்டு இலவச சட்ட உதவி மையத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இயங்கி வரும் கே.எம்.சி சட்ட கல்லூரியில் இன்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உடன் இணைந்து துவங்கப்பட்டுள்ள இலவச சட்ட உதவி மையம் திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திருப்பூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற முதன்மை நீதிபதி ஸ்வர்ணம்.ஜே.நடராஜன் அவர்கள் கலந்துகொண்டு இலவச சட்ட உதவி மையத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

ஏழை மக்கள் பயன் பெறும் வகையிலும், அவர்களுக்கான சட்ட உதவிகளை இலவசமாக வழங்கும் வகையிலும் இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. மேலும் கேஎம்சி சட்டக் கல்லூரியின் தாளாளர் த அருணா ஸ்ரீதேவி, கல்லூரி முதல்வர் சவுந்தரபாண்டியன், சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் சட்டக் கல்லூரி பேராசிரியர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்வினை தொடங்கி வைத்தனர்.



இதைத் தொடர்ந்து மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்வர்ணம்.ஜே.நடராஜன் மாணவர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியாதவது, திருப்பூர் மாவட்டத்தில் முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ள இந்த சட்டக் கல்லூரியில் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் மாவட்டத்திலேயே முதல் முறையாக சட்ட உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் மாணவர்கள் மக்களுக்கு எப்படி உதவலாம் என்பது குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.



மேலும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தங்கள் கல்லூரியில் திறக்கப்பட்டுள்ள இலவச சட்ட உதவி மையத்தை அணுகலாம் என கல்லூரி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...