முத்தாண்டிபாளையத்தில் சந்தன மரம் கருத்தரங்கு - ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பு

தமிழகத்தி்ன் மானாவாரி நிலங்களில் மர வளர்ப்பை ஊக்குவிக்கவும், சந்தன மர சாகுபடியை அனைத்து விவசாயிகளுக்கும் கொண்டு செல்லவும் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ‘கோடிகளை கொடுக்கும் சந்தனம்! சாமானியனுக்கும் சாத்தியமே என்ற கருத்தரங்க நிகழ்வு பல்லடம் அருகே முத்தாண்டிபாளையத்தில் நடைபெற்றது.


திருப்பூர்: சந்தன மரம் வளர்ப்பு தொடர்பான கருத்தரங்கில் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தி்ன் மானாவாரி நிலங்களில் மர வளர்ப்பை ஊக்குவிக்கவும், சந்தன மர சாகுபடியை அனைத்து விவசாயிகளுக்கும் கொண்டு செல்லவும் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ‘கோடிகளை கொடுக்கும் சந்தனம்! சாமானியனுக்கும் சாத்தியமே!’ என்ற கருத்தரங்க நிகழ்வு இன்று பல்லடம் அருகே முத்தாண்டிபாளையத்தில் நடைபெற்றது.



இவ்விழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.



விழாவின் தொடக்க நிகழ்வாக பாரம்பரிய மருத்துவம் பற்றியும், தமிழர்களின் கலைகள் பற்றியும், விவரிக்கும் வகையில் சிறப்பு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



கருத்தரங்கில் சந்தன மர சாகுபடி தொழில் நுட்பங்கள், விற்பனை வாய்ப்பு, பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து வனவியல் விஞ்ஞானிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் விளக்கினர். பெங்களூரு மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி R.சுந்தர்ராஜ் (ஓய்வு), விஞ்ஞானி சௌந்தரராஜன், மானாவாரி நிலத்தில் செம்மரம் சாகுபடி செய்துள்ள ஆசிரியர் ராமன், செம்மரச் செம்மல் கணேசன் போன்றோர் கலந்து கொண்டனர்.

மேலும், மரம் சார்ந்த விவசாயம் குறித்து காவேரி கூக்குரல் வல்லுநர்கள் விளக்கமாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். இந்த கருத்தரங்கத்திற்கு தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...