பி.ஏ.பி பாசனத்தில் தண்ணீர் திருட்டு - பாசன வாய்க்காலை ஒட்டி உள்ள 12 மின் இணைப்பு துண்டிப்பு

பி.ஏ.பி பாசன வாய்க்காலில் தண்ணீர் திருட்டை தடுக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அதிகாரிகளின் குழுவினர் 12-மின் இணைப்பை துண்டித்துள்ளனர்.


திருப்பூர்: தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன் தலைமையில் மின்வாரியத்தினர், பொதுப்பணித்துறையினர், போலீசார்,வருவாய்துறையினர் இணைந்து விவசாயிகளின் தோட்டத்தில் உள்ள 12-மின் இணைப்பை துண்டித்தனர்.

பி.ஏ.பி நான்காம் மண்டலத்தில் தாராபுரத்தை அடுத்த பொட்டிக்கம்பாளையம், நாரணாபுரம் பொன்னாபுரம் பகுதிகள் பாசன வசதி பெறுகிறது. பி.ஏ.பி பாசனப்பகுதியில் மேல் ஆயக்கட்டு விவசாயிகள் தண்ணீர் சப்ளையின்போது ஒஸ் போட்டு தண்ணீர் திருடுவதால் கடைமடைக்கு தண்ணீர் போய் சேர்வதில்லை.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பாசன வாய்க்காலை ஒட்டி 50-மீட்டருக்குள் உள்ள மின் இணைப்புகளை துண்டிக்க அதிகாரிகள் குழு ஏற்பாடு செய்தனர்.



தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன் தலைமையில் மின்வாரியத்தினர், பொதுப்பணித்துறையினர், போலீசார், வருவாய்துறையினர் இணைந்து விவசாயிகளின் தோட்டத்தில் உள்ள 12-மின் இணைப்பை துண்டித்தனர்.



ஒவ்வொரு மின்இணைப்பை துண்டிக்கும் போதும் அந்த மின் இணைப்பு பெற்ற விவசாயின் குடும்பத்தினர் தடுத்தனர்.

அதிகாரிகள் விதிப்படி மின் இணைப்பை துண்டிக்கப்படுவதாக கூறி துண்டித்தனர்.

நாராணபுரம் பகுதியில் தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் மின் இணைப்பு துண்டிப்பு விஷயத்தில் சில விளக்கங்கள் தேவை என்று கூறியதையடுத்து மின்இணைப்பை துண்டிக்கும்பணி நிறுத்தப்பட்டது.16-தேதி விவசாயிகள்குழு தாராபுரம் கோட்டாட்சியர் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...