தாராபுரத்தில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நாளையுடன் நிறைவு

தாராபுரம் ரோட்டரி கிளப், தாராபுரம் ரோட்டரி அறக்கட்டளை, பாக்யா டி.வி, ஒமகோ ஈவென்ட்ஸ் இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி தாராபுரம் உடுமலை ரோட்டில் உள்ள ரோட்டரி மகாலில் தொடங்கியது.


திருப்பூர்: கண்காட்சியில் தள்ளுபடி விலையில் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் உள்ளன.

தாராபுரம் ரோட்டரி கிளப், தாராபுரம் ரோட்டரி அறக்கட்டளை, பாக்யா டி.வி., ஒமகோ ஈவென்ட்ஸ் இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி தாராபுரம் உடுமலை ரோட்டில் உள்ள ரோட்டரி மகாலில் தொடங்கியது. துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் ரிப்பன் வெட்டி கண்காட்சியை தொடங்கிவைத்தார்.

விழாவில் மாவட்ட ரோட்டரி ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம், அறக்கட்டளை தலைவர் லோகநாதன், ரோட்டரி சங்க தலைவர் சுப்ரமணியம், நிர்வாகத்தினர் குமாரசாமி, குப்பிராஜ், அழகுராஜா, சிவப்பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கண்காட்சியில் தள்ளுபடி விலையில் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் உள்ளன. பல்வேறு விளையாட்டுகள் உள்ளன. போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது. கண்காட்சி நாளை (திங்கட்கிழமை) நிறைவடைகிறது. கண்காட்சி ஏற்பாடுகளை ரோட்டரி செயலாளர் கதிரவன், திட்ட இயக்குனர் மைக்கேல், ஓமேகா ஈவென்ட்ஸ் வெங்கடேஷ் ஆகியோர் செய்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...