நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் - கோவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ரசிகர்கள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 95வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கோவை மாவட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மக்கள் இயக்கம் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


கோவை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்களை கௌரவப்படுத்தும் விதமாக மூத்த ரசிகர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.

கோவை மாவட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மக்கள் இயக்கம் சார்பில், சிவாஜி கணேசன் அவர்களின் 95வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கோவை காந்தி பார்க் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிவாஜி சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.



இதில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்ற செயலாளர் எம்எல் கான் அவர்கள் சிறப்பு விருந்தினர் கலந்து கொண்டார். சிவாஜி கணேசனின் அவர் வாழ்ந்த வாழ்க்கையை பற்றி புகழ்ந்து பேசினார்கள். சிவாஜி கணேசனின் ரசிகர்களை கௌரவப்படுத்தும் விதமாக மூத்த ரசிகர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.



பின்னர் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, வேட்டி, சேலை மற்றும் பண உதவி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிவாஜி செல்வகுமார், ராஜகோபால், புஷ்பராஜ், கண்ணன், கிருஷ்ணவேணி, சிவாஜி லோகு, ராதாகிருஷ்ணன் மற்றும் சிவாஜியின் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...