வால்பாறை வழியாக கேரள மாநிலம் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

மழை காரணமாக அம்பலப்பாறை என்ற இடத்தில் சாலையில் மண்ணரிப்பு ஏற்பட்டு சாலை உடைந்து சேதம் அடைந்துள்ளதால், அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு திருச்சூர் மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.


கோவை: சாலையை சரி செய்யும் வரை வால்பாறை அதிரப்பள்ளி சாலையில் செல்ல வேண்டாம் என சுற்றுலா பயணிகளுக்கு திருச்சூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.



கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலம் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி உள்ளது. இந்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும், மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இதில் வால்பாறையில் இருந்து 80 கிலோ மீட்டர் வனப்பகுதி வழியாக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகள் வன விலங்குகள் பார்க்க செல்லுகின்றனர்.



இந்நிலையில் நேற்று அதிரப்பள்ளி வன பகுதியில் பெய்த கனமழையால் அம்பலப்பாறை என்ற இடத்தில் சாலையில் மண்ணரிப்பு ஏற்பட்டு சாலை உடைந்து சேதம் அடைந்தது.

இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலை சரி செய்யும் வரை வால்பாறை அதிரப்பள்ளி சாலையில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று திருச்சூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...