பல்லடம் அருகே கோவிலுக்கு வந்தவரின் ஆம்னி வாகனம் திருட்டு - காரை திருடி செல்லும் சிசிடிவி வெளியீடு

பல்லடம் அருகே அவிநாசிபாளையத்தில் பெருமாள் கோவிலுக்கு வந்தவரின் ஆம்னி வாகனம் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: சிசிடிவி காட்சிகளை வைத்து ஆம்னி வாகனத்தை திருடி சென்ற நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் செஞ்சேரிமலை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். விவசாயியான இவர் நேற்று அவிநாசிபாளையத்தில் உள்ள ராமசாமி பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்ற புரட்டாசி கடைசி சனிக்கிழமை சிறப்பு பூஜைக்கு தனது குடும்பத்துடன் ஆம்னி வாகனத்தில் வந்துள்ளார். திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் தனது ஆம்னி வாகனத்தை நிறுத்திவிட்டு சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் சென்று விட்டு மீண்டும் வெளியே வந்து பார்த்தபோது ஆம்னி வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.



சம்பவம் குறித்து சதீஷ்குமார் அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து ஆம்னி வாகனத்தை திருடி சென்ற நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தனியார் உணவகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் சதீஷ்குமாரின் காரை யாரோ ஒரு நபர் சின்னூர் பிரிவு சாலையில் ஓட்டிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளது.



சிசிடிவி காட்சிகளை வைத்து ஆம்னி வாகனத்தை திருடி சென்ற நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...