வால்பாறையில் கலைஞர் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் -200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

வால்பாறையில் அரசு கலைக் கல்லூரியில் கலைஞர் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற மருத்துவ முகாமில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பரிசோதனை செய்துகொண்டனர்.


கோவை: கலைஞர் வருமுன் காப்போம் மருத்துவ முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இஜிசி மற்றும் பொது மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கலைஞர் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பங்கேற்று பயன் அடைந்தனர். வால்பாறையில் அரசு கலைக் கல்லூரியில் கலைஞர் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடைபெற்றது. இப்பணியில் 10 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியாற்றினார்.

வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் ராஜாராம், வால்பாறை மருத்துவர் சாமிநாதன், முடிஸ் நகர் மருத்துவர் உதயா, சோலையார் நகர் மருத்துவர் பாபு லட்சுமணன் தலைமையில் பணியாற்றினார்.



இதில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இஜிசி, பொது மருத்துவ ஆலோசனை போன்றவைகள் மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.



இதில் வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி மற்றும் துணைத் தலைவர் தாமா செந்தில்குமார் மற்றும் திமுக நகரச் செயலாளர் சுதாகர் ஆகியோர் இப்பணியை துவங்கி வைத்தனர். காலை 10 மணியிலிருந்து முகாம் நடைபெற்றது.



இதில் 200க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...