என் மண் என் மக்கள் யாத்திரையில் பங்கேற்க மத்திய அமைச்சர் பியுஷ்கோயல் கோவை வருகை

இன்று தொடங்கும் பாஜகவின் 'என் மண் என் மக்கள்' யாத்திரையின் மூன்றாம் கட்ட பயணத்தில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் பியுஷ்கோயல் கோவை வந்துள்ளார்.


கோவை: பாஜகவின் என் மண் என் மக்கள் யாத்திரையின் மூன்றாம் கட்ட பயணம் இன்று காலை அவிநாசியிலும் மாலையில் மேட்டுப்பாளையத்திலும் நடைபெறவுள்ளது.

பாஜகவின் 'என் மண் என் மக்கள்' யாத்திரையின் மூன்றாம் கட்ட பயணம் இன்று திருப்பூர் மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் மீண்டும் துவங்குகிறது. இதில் மத்திய அமைச்சர் பியுஷ்கோயல் கலந்து கொள்ள உள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இன்று காலை நடைபெறும் பாதயாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், மாலை கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பாதயாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் பியுஷ்கோயல் இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...