தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வேண்டும் - HMS கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்து மஸ்தூர் சபா(HMS) சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களில் வாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் தீபாவளி போனஸ் 7 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று இந்து மஸ்தூர் சபா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.



கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்து மஸ்தூர் சபா(HMS) சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில், "கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களில் வாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் தீபாவளி போனஸ் 7 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், பதிவு செய்து புதுப்பிக்கப்படாத தொழிலாளர்களுக்கும் புதிதாக சேரக்கூடிய தொழிலாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வாரியத்தின் பயன்கள் அடைந்திடவும், வயதான காலத்தில் சமூக பாதுகாப்பு கிடைத்திடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், வீடு கட்ட மானியம் பெறுவதற்கான நடைமுறையை எளிமையாக்க வேண்டும், அனைத்து நல வாரியங்களும் ஒரே மாதிரியான இணையதள நடைமுறையை பின்பற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.



இந்த கவன எதிர்பார்ப்பாட்டத்தில் HMS மாநில செயலாளர் இராஜாமணி, மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி உட்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...