தொழிலதிபர் மார்ட்டின் வீட்டில் 5வது நாளாக நடைபெற்ற வருமானத்துறை சோதனை நிறைவு

கோவையில் லாட்டரி விற்பனை அதிபர் மார்ட்டின் வீட்டில் வருமானத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது.


கோவை: தொடர் சோதனையில் மார்ட்டின் வீட்டிலும், தலைமை அலுவலகத்திலும் எதுவும் கிடைக்க பெறாத நிலையில், மீண்டும் மீண்டும் சோதனை செய்வதா என மார்ட்டின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.



கோவையில் லாட்டரி விற்பனை அதிபர் மார்ட்டின் வீட்டில் வருமானத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் வருமானத்துறை அதிகாரிகள் ஏந்த முகாந்திரம் இல்லாமல் தொடர் சோதனை செய்து வருவதாக கூறி அவரது வீட்டின் முன்பு அவரின் அலுவலகத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் உறவினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டின் இல்லத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த வருமானவரித்துறையினரின் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு கண்டனம் தெரிவித்து, அவரது வீட்டின் முன்பு மார்டின் அலுவலகத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் மற்றும் உறவினர்கள் குவிந்தனர்.



நான்கு நாட்களுக்கும் மேலாக வருமான வரித்துறையினர் நடத்தி சோதனையில் மார்ட்டின் வீட்டிலும், தலைமை அலுவலகத்திலும் எதுவும் கிடைக்க பெறாத தகவலின் அடிப்படையில் எந்த ஒரு முகாந்திரமும் இன்றி தொடர் சோதனையில் ஈடுபடுவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கோவை லாட்டரி விற்பனை அதிபர் மார்ட்டின் வீட்டில் தொடர்ந்து ஐந்தாவது இன்றும் வருமானத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...