பல்லடத்தில் அதிகாலையில் காற்றாலை மீது விழுந்த இடி - இயங்காமல் இருந்ததால் விபத்து தவிர்ப்பு

பல்லடம் அருகே கேத்தனூரில் ஆறு வருடங்களாக இயங்காமல் இருந்த காற்றாலை மீது இன்று அதிகாலையில் இடி இறங்கி முழுமையாக பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது.


திருப்பூர்: இடி விழுந்து பற்றி எரிந்த காற்றாலை இயங்காமல் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேத்தனூரில் இருந்து மானாசிபாளையம் செல்லும் சாலையில் ஏராளமான காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன.



அதில் ஆறு வருடங்களாக இயங்காமல் இருந்த காற்றாலை மீது திடீரென இன்று அதிகாலை இடி இறங்கியதால் காற்றாலை முழுமையாக தீ பற்றி எரிய தொடங்கியது.

இந்த காற்றாலை அமைக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆவதாகவும் கடந்த ஆறு வருடங்களாக காற்றாலை இயங்கவில்லை எனவும் காற்றாலை இயங்காமல் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.



தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த பல்லடம் தீயணைப்பு துறை வீரர்கள் தீயினை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அருகில் வீடுகள், கால்நடைகள் எதுவும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

ஹை டெக் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான இந்த காற்றாலை இயங்காமல் இருந்த நிலையில் அந்த காற்றாலையை அப்புறப்படுத்தாமல் இருந்ததே விபத்துக்கு காரணம் எனவும் இதுபோன்று ஏராளமான காற்றாலைகள் இப்பகுதியில் இயங்காமல் உள்ளதாகவும் இது போன்ற விபத்துக்களை தவிர்க்க உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...