உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 33 வருடங்களுக்கு முன் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 1987 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில் இன்று கல்லூரியில் கல்லூரி சங்கமும் என்ற நிகழ்ச்சி ஆட்டம் பாட்டத்துடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.


திருப்பூர்: 33 வருடங்களுக்குப் பிறகு அரசு கலைக் கல்லூரியில் பயின்ற வணிகவியல், பொருளாதாரம், கணக்குப்பதிவியல், உள்ளிட்ட அனைத்து துறைகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 33 ஆண்டுகளுக்குப் பிறகு நேரில் சந்தித்து தங்களது கல்லூரி கால நிகழ்வுகளை நினைவு கூர்ந்து மகிழ்ச்சி அடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 1987 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில் இன்று கல்லூரியில் கல்லூரி சங்கமும் என்ற நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் கல்யாணி, ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மணி, வெள்ளிங்கிரி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 33 வருடங்களுக்குப் பிறகு அரசு கலைக் கல்லூரியில் பயின்ற வணிகவியல், பொருளாதாரம், கணக்குப்பதிவியல், உள்ளிட்ட அனைத்து துறைகளின் சேர்ந்த மாணவ மாணவிகள் 33 ஆண்டுகளுக்குப் பிறகு நேரில் சந்தித்து தங்களது கல்லூரி நாட்களில் கடந்தவற்றை நினைவு கூர்ந்து மகிழ்ச்சி அடைந்தனர்.



முக்கிய நிகழ்வாக மேலும் 33 வருடங்களுக்கு முன் பாடம் சொல்லிக் கொடுத்த பேராசிரியர்ககளை கவுரவிக்கும் பொருட்டு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கியும முன்னாள் மாணவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய நிகழ்வு பெறும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



இதற்கு இடையில் தாங்கள் வகுப்புகளில் அமர்ந்து கல்லூரி நாட்களில் நடந்த சம்பங்களை பரிமாறிக் கொண்டனர்.



மேலும் தங்களுது தொலைப்பேசிகளில் தன்படம் எடுத்து மற்றவர்களுக்கு அனுப்பி மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் அரசு கலைக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் தற்பொழுது பல்வேறு காவல்துறை தீயணைப்பு துறை ஆசிரியர்கள், கப்பல் மற்றும் விமானத்துறை மற்றும் பல்வேறு துறைகளில் உயர் பதவிகளில் பணியாற்றி வருகின்றனர்.



இருப்பினும் இன்று முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் கல்லூரியில் மாணவர்கள் போல மாறி கல்லூரி நாட்களில் செய்ததைப் போல விசில் அடித்தும் திரைப்பட பாடல்களுக்கு நடனமாடியும் தங்களது எல்லையற்ற மகிழ்ச்சியை வெளி படுத்திய சம்பவம் அனைவரையும் மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியது.

முன்னாள் மாணவர் கூறும் பொழுது ஒருவர் கூறும் பொழுது, கடந்த 33 வருடங்களுக்குப் பிறகு நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இருப்பது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக உள்ளது கல்லூரி நாட்களில் நடந்தவற்றை எங்களால் தற்பொழுது மறக்க முடிய வில்லை இதனால் கடந்த இரண்டு மாதமாக முன்னாள் மாணவர்களை ஓருங்கிணைத்து வாட்ஸ் அப் குழு ஒன்று உருவாக்கி தற்பொழுது கல்லூரியில் பிரம்மாண்டமான விழாவை நடத்தி உள்ளோம் கல்லூரி காலகட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் சங்கடங்கள் இருந்தாலும் இன்றைய கல்லூரி சங்கமம் நிகழ்ச்சியில் அனைவரும் அனைத்தையும் மறந்து சந்தோஷத்தை பரிமாறிக் கொண்டோம் இனி வருங்காலங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்தார் உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம், பல்லடம், பழனி, திண்டுக்கல் முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து 500 மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர் மேலும் கல்லூரிக்கு வருகை புரிந்த அனைத்து மாணவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அரசு கலைக் கல்லூரிகள் நடைபெற்ற கல்லூரி சங்கம் நிகழ்வினை முன்னாள் மாணவர்கள் பாலசுப்பிரமணியம் தலைமையில் நண்பர்கள் மூலம் ஏற்பாடு செய்யபட்டு இருந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...