வரும் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியீடு - கோவை மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாடுகள் விதிப்பு

19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாகவுள்ளநிலையில்,கோவை மாவட்ட ஆட்சியர் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். தியேட்டர்கள் 19ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் மட்டும் சிறப்புக்காட்சி திரையிடுதலுக்கு அனுமதிக்கபடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் (கேஜி) திரையரங்கில் லியோ படம் பார்பதற்கு அரசு நிர்ணயத்தை கட்டணத்தை விட கூடுதலாக 400 ரூபாய் வசூலிப்பதாக அங்குள்ள ஊழியர் ஒருவர் பேசும் வீடியோசமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எஸ்.எஸ்.லலித்குமார் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் எடுக்கப்பட்டுள்ள லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் எப்போ வரும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமர் பாடி, லியோ படத்திற்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 19ஆம் தேதி வெளிவரவிருக்கும் நடிகர் விஜய் நடித்துள்ள "லியோ" திரைப்படத்திற்கு கோவை மாவட்டத்தில் உள்ள தியேட்டர்கள்19ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் மட்டும் சிறப்புக்காட்சி திரையிடுதலுக்கு அனுமதிக்கபடுகிறது.

தொடக்க காட்சி காலை9.00 மணிக்கும் கடைசி காட்சியாக அதிகாலை 1.30 மணியளவில் முடிவடையும் வகையில் திரையிடப்பட வேண்டும். தமிழ்நாடு சினிமா ஒழுங்குமுறை விதிகள், 1957 விதிகளின்படி 14A படிவம் "சி" உரிமத்தின் நிபந்தனையின்படி புதிய திரைப்படம் வெளியிடும் நிகழ்ச்சியின் போது, திரையரங்க உரிமையாளர்கள் முறையான போக்குவரத்து மற்றும் பார்க்கிங் வசதி செய்ய வேண்டும்.

திரையரங்குகளில் கூடுதல் காட்சி நடத்தப்படும் நேர்வில் சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். திரைப்படம் காண்போரின் வாகனங்கள் உள்ளே நுழைதல், வெளியேறுதல், வாகனம் நிறுத்துதல் மற்றும் இயக்குதல் பாதிக்கப்படாத வகையிலும், காவல் துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.

பார்வையாளர்கள் சிரமமின்றி உள்ளே வரவும், சிரமமின்றி வெளியேறவும், இருக்கைகள் மற்றும் திரையரங்க வளாகத்தினை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். திரையரங்குகளை சுகாதாரமாக பராமரிக்க போதுமான கால இடைவெளியுடன், உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிறப்பு காட்சி நடத்தப்பட வேண்டும்.

அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக நுழைவுக்கட்டணங்கள், வாகன நிறுத்தக்கட்டணம்வசூலிக்கக்கூடாது என கூறப்பட்டுள்ளது. இதனிடையே கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் (கேஜி )திரையரங்கில் லியோ படம் பார்பதற்கு அரசு நிர்ணயத்தை கட்டணத்தை விட கூடுதலாக 400 ரூபாய் வசூலிப்பதாக அங்குள்ள ஊழியர் ஒருவர் பேசும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...