திருப்பூர் அருகே சிறுத்தை நடமாட்டம் - பொதுமக்கள் அச்சம்

திருப்பூர் மாவட்டம் அழகுமலை அடுத்த பாளையம் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.


 திருப்பூர்: திருப்பூர் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக புகார் எழுந்த நிலையில் வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் அழகுமலை அடுத்த மலைபாளையம் கிராமம் உள்ளது இந்த பகுதியில் பாலசுப்ரமணியம் என்பவர் தோட்டத்தில் கன்று குட்டி மாட்டு தொழுவத்தில் கட்டியிருந்த நிலையில் திடீரென்று அலறல் சத்தம் கேட்டுள்ளது பின்னர் அங்கு வேலை செய்யும் வட மாநில தொழிலாளியான விஜய் நேரில் சென்று பார்த்தபோது உடலில் நக காயங்கள் இருந்துள்ளது பின்னர் நாய் கடித்திருக்குமோ என்ற எண்ணத்தில் பெரிதாக எண்ணாமல் மருத்துவருக்கு தகவல் சொல்லிவிட்டு அவர் தோட்டத்து வேளையில் ஈடுபட்டிருந்தார்.

பின்னர் சுமார் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் கன்று குட்டியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது அப்போது கன்று குட்டிக்கு அருகில் சிறுத்தை இருந்ததைக் கண்ட வட மாநில தொழிலாளி விஜய் கூச்சலிட்டு கொண்டு தோட்டத்தில் இருந்து வெளியே வந்தார்.

இந்த நிலையில் தோட்டத்து உரிமையாளர் உடனே சென்று பார்த்த போது அங்கிருந்து சிறுத்தை அங்கிருந்து மாயமாகிறது பின்னர் அக்கம்பக்கத்தினர் தகவல் அறிந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர் கூடிய நிலையில் வனத்துறையினர் மற்றும் அவிநாசி பாளையம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.



பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கன்று குட்டியை ஆய்வு செய்து அந்த தோட்டம் முழுவதும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என்ன ஆய்வு செய்தனர்.



பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ சாமிநாதன் அப்பகுதியில் நடந்த சம்பவத்தை நேரில் பார்த்த விஜய் இடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அப்பகுதி முழுவதும் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுரை கூறி சென்றார் சிறுத்தையின் நடமாட்டத்தை தொடர்ந்து அந்தப் பகுதியில் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...