தாராபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் வாக்குசாவடி முகவர் ஆலோசனைக் கூட்டம் - சி.மகேந்திரன் எம்.எல்.ஏ பங்கேற்பு

தாராபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் வாக்குசாவடி முகவர் ஆலோசனைக் கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி தற்போது ஒவ்வொரு வாக்கு சாவடி வாரியாக இளைஞர் மற்றும் இளம் பெண்களை குறிப்பாக 18 வயது நிரம்பிய இளைஞர்களை கட்சி உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் தெரிவித்தார்.


திருப்பூர்: தாராபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் வாக்குசாவடி முகவர் ஆலோசனைக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் கலந்துகொண்டு, தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.



தாராபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மகளிர் வாக்குசாவடி முகவருக்கான ஆலோசனை கூட்டத்துக்கு நகர செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சின்னப்பன் என்ற பழனிசாமி, ஒன்றிய செயலாளர்கள் பாலு என்ற பாலகுமாரன், கே.செல்வகுமார், ரமேஷ், மாவட்ட மகளிர் அணி தலைவர் ரேவதிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



அப்போது திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் மடத்துக்குளம் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ. பேசுகையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி தற்போது ஒவ்வொரு வாக்கு சாவடி வாரியாக இளைஞர் மற்றும் இளம் பெண்களை குறிப்பாக 18 வயது நிரம்பிய இளைஞர்களை கட்சி உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்றார்.



இதில் மாவட்ட கவுன்சிலர் பானுமதி கருணாகரன், மாவட்ட பிரதிநிதி கோல்டன் ராஜ், மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் அணி செயலாளர் பங்கு மகேஷ்குமார், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் கவுரிசித்ரா முருகேசன், முன்னாள் நகர கவுன்சிலர் அரசகுமார், குளத்துபாளையம் பேரூராட்சி செயலாளர் பைப் ரவிச்சந்திரன், நகர இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் கே.ஆர்.சதீஷ்குமார் உள்பட பலர்கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...