கோவையில் பி.பிபார்ம் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

கோவை மாவட்டம் ஒத்தக்கால்மண்டபம், கற்பகம் மருந்தியல் கல்லூரியில் பி.பிபார்ம் முதலாமாண்டுமாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


 கோவை: முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரி குறித்து ஏற்படும் சந்தேகங்களுக்கு முதல் நாளே பேராசியர்கள் விளக்கமளித்தனர்.

ஒத்தக்கால்மண்டபம், கற்பகம் மருந்தியல் கல்லூரியில் பி.பிபார்ம் முதலாமாண்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர், முனைவர் S .மோகன் மருந்து தயாரிப்பு துறையில் மாணவர்களின் பங்களிப்பு பற்றி பேசினார். மேலும் கற்பகம் கல்வி குழுமத்தின் PRO ஆதிபாண்டியன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார். இதை தொடர்ந்து முனைவர் C.S. கந்தசாமி வரவேற்புரை அளித்தார். கல்லூரியின் ஆராய்ச்சி துறை இயக்குனர் முனைவர் A. நாகராஜன் பாராட்டு உரை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பி.பார்ம் வேலைவாய்ப்பு பற்றி முனைவர் M. கற்பகவல்லி மற்றும் கல்லூரியின் சாதனைகளை பற்றி முனைவர் S. ராம்காந்த் பேசினார்கள்.

கல்லூரியில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பற்றி முனைவர் A. மாதேஸ்வரன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் 100 மாணவர்களும் 300 பெற்றோர்களும் கலந்துகொண்டு கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் கல்லூரி முதல்வர் பதிலளித்தார். இதைத்தொடர்ந்து நன்றி உரையை முனைவர் சசிகலா பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...