பி.ஏ.பி யில் துண்டிக்கப்பட்ட 12-மின் இணைப்பை மீண்டும் வழங்க கோரி விவசாயிகள் காத்திருக்கும் போராட்டம்

பி.ஏ.பி விவசாயிகளிடம் துண்டிக்கப்பட்ட 12-மின் இணைப்பை மீண்டும் வழங்க கோரி ஆடு மாடுகளுடன் விவசாயிகள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்‌.


திருப்பூர்: துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு மீண்டும் வழங்க வேண்டும் என்று தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பொட்டிக்காம்பாளையம், பொன்னாபுரம், தாசர்பட்டி, நாரணபுரம் ஆகிய பகுதியில் பி ஏ பி பாசனத்தில் பி.ஏ.பி பாசன வாய்க்காலில் 50-மீட்டருக்குள் பி.வி.சி குழாய் அமைத்து மின் இணைப்பு மூலம் தண்ணீர் எடுக்கும் விவசாயிகளின் 12-மின் இணைப்பை இரண்டு தினங்களுக்கு முன்பு தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன் தலைமையிலான குழுவினர் துண்டித்தனர்.

துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு விவசாயிகள் மற்றும் இதர விவசாயிகள் தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு பேச்சுவார்த்தைக்கு வந்தனர். விவசாயிகள் தரப்பில் துண்டிக்கப்பட்ட 12-மின் இணைப்பை மீண்டும் வழங்க வேண்டும் கோரிக்கையை வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் ஏ.எஸ்.பி ஜான்சன், காங்கேயம் டி.எஸ்.பி பார்த்திபன், உடுமலை டி.எஸ்.பி முத்துக்குமரன்,தாராபுரம் மின்வாரியத்துறை டி .இ இபாலன் மற்றும் பி.ஏ.பி அதிகாரிகள் பங்கேற்றனர்.

விவசாயிகளின் கோரிக்கையை கேட்ட தாராபுரம் ஆர்.டி.ஓ இது குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து பேசி முடிவு செல்வதாக கூறினார்.



அப்போது, விவசாயிகள் ஆடு மாடுகளுடன் தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருந்தனர். மாவட்ட நிர்வாகத்துடன் பேசி வந்த பிறகு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க இயலாது விதிப்படிதான் நடவடிக்கை எடுத்துள்ளதாக தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன் கூறினார்.



இதை அடுத்து விவசாயிகள் கலைந்து செல்ல மாட்டோம் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



போலீசார் காத்திருந்த பெண்கள் மற்றும் விவசாயிகளை குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். பின்னர் தாராபுரம் அழகு நாச்சியம்மன் திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். விவசாயிகள் கைது செய்யப்படும் போது படுகாயம் அடைந்த பொன்னபுரம் ஈஸ்வரன் என்ற விவசாயி சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். விவசாயிகள் ஆடு மாடுகளுடன் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதும் போலீசார் கைது செய்த போது மறுத்த விவசாயிகளை குண்டுகட்டாக தூக்கி பேருந்தில் ஏற்றியது தாராபுரத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. ஏ.டி.எஸ்.பி ஜான்சன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...